Tuesday, November 29, 2011

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 24 பேர் உயிரிழப்பு!

Tuesday, November 29, 2011
சீரற்ற காலநிலை காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், சீர்ற்ற காலநிலை காரணமாக 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 800 வீடுகள் முற்றாகவும் 7ஆயிரத்து 832 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் அவை தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன் சேதமடைந்துள்ள வீடுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான நிதி மாவட்ட செயலகங்களில் கையளிக்கப்படவுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்.

இடம் பெயர்ந்தவர்களுக்காக 6 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஆயிரத்து 705 பேர் தற்காலிகமாக தங்கியுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் 74 ஆயிரத்து 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment