Saturday, October 01, 2011
ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு கொண்ட கார் மற்றும் இரட்டை வலுவுடைய வாகனங்களின் சாரதிகள் மற்றும் முன் ஆசனத்தில் அமர்கின்றவர்கள் இன்றிலிருந்து ஆசனப் பட்டியை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்க மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் விதிகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல் பதிவு செய்யப்படும் அனைத்து பஸ்கள் மற்றும் லொறிகளுக்கும் இந்த சட்டம் இன்று முதல் அமுலாவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகிறது.
எனினும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய ஆசனப்பட்டி அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விசேட தேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் சிறிய ரக உழவு இயந்திரங்கள் என்பவற்றுக்காக இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபபடுவதுடன், சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தல் அல்லது இடைநிறுத்தி வைக்கப்பட்ட தண்டனைகளை வழங்க முடியும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment