Saturday, October 1, 2011

ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக வானிட்டி என்னும் பிரபல சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது!

Saturday, October 01, 2011
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரபல அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக வானிட்டி பெயார் என்னும் பிரபல சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ராஜ் ராஜரட்னம் அமெரிக்க நிதிச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நிதிச் சந்தை சார் தகவல்களை இரகசியமாக பெற்றுக் கொண்டு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளுக்கு ராஜ் ராஜரட்னம் பெருமளவு பணத்தை வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு உளவாளியாக மாறிய புலி உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

புலிகளுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென ராஜ் ராஜரட்னம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளுடன் ராஜரட்னம் பேணிய தொடர்புகளை அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது என ராஜரட்னத்தின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நிதிச் சந்தை மோசடி குறித்து நீதிமன்றில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிதிச் சந்தை மோசடிகளில் ஈடுபட்டமைக்காக அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய மிக நீண்ட தண்டனை ராஜ் ராஜரட்னத்திற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment