Saturday, October 1, 2011

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக பரிசு பொருள் கொடுக்க தடை: ஓட்டுக்கு லஞ்சமாக கருதி நடவடிக்கை!

Saturday, October 01, 2011
சென்னை:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக ஓட்டு கேட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் தங்கள் வார்டில் உள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நண்பர்களும், கட்சி பிரமுகர்களும் உடன் சென்று வருகின்றனர்.

வேட்பாளர்கள் ஓட்டு கேட்கும்போது வீடு வீடாக லஞ்சமாக பரிசு பொருள் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளும் ஆங்காங்கே பிரசாரத்தை கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே சில பகுதிகளில் எவர்சிலர் பாத்திரம், குக்கர், தோசைக்கல் போன்றவற்றை கொடுக்க இருப்பதாக வந்த தகவலையொட்டி தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் உயர் அதிகாரியிடம் கேட்டதற்கு வீடு வீடாக பரிசு பொருட்களை கொடுத்தால் அது லஞ்சமாக கருதப்படும். அத்தகைய பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவதோடு வேட்பாளரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படும். இதேபோல் ஆரத்தி எடுத்தாலும் பணம் கொடுக்கக்கூடாது. அதுவும் குற்றமாக கருதப்படும்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment