Saturday, October 1, 2011

தபால்மூலம் வாக்களிக்க மீண்டும் சந்தர்ப்பம்!

Saturday, October 01, 2011
கடந்த இரண்டு நாட்களாக தபால்மூலம் வாக்களிக்க முடியாமல் போன அரச ஊழியர்களுக்கு, இம்மாதம் 7ஆம் திகதி வரை அதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கிறது.

தத்தமது நிறுவனத் தலைவர் ஊடாக தபால் மூலம் வாக்களிப்பதற்காகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபி்ள்யூ.பீ.சுமனசிறி தெரிவிக்கிறார்.

இதற்கான ஆலோசனை அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கியுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கிறது.

தபால்மூலம் வாக்களிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு நாட்களிலும் 80 வீதத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment