Saturday, October 01, 2011
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருக்கின்றது. எக்காரணம் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஏமாற்றும் எண்ணம் எமக்கில்லை. இவ்வாறு ஸ்ரீலங்கா தந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்ருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.தீர்வு விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடாத்தும் பேச்சுவார்த்தை தொடர்பாக கேசரி நாளிதழுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்து கூறியுள்ளதாவது:
ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரின் போது எமக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சில தரப்பினர் முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனத்தில் தாமதம் இருப்பதாக தெரியவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்வார். அந்த வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழு விரைவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்தில் ஸ்தம்பிதமடையும் நிலைக்கு சென்றது என்பது மிகவும் கவலைக்குய விடயமாகும்.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருக்கின்றது.
எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஏமாற்றும் எண்ணம் எமக்கு இல்லை.
தீர்வு விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவது அவசியமாகும்.
அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது வடக்கில் அதிகளவு பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள்ள கட்சியாகும். அதனை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது.
எனவே முக்கிய விடயங்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச வேண்டியது அவசியமாகும். அதனையே நாங்கள் செய்துகொண்டிருக்கின்றோம்.
அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ள து.
அதாவது தமிழ் பேசும் மக்களை அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தவேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். எனவே தீர்வுத்திட்டம் என்பது வரும். அது தொடர்பில் நாங்கள் நம்பிக்கை வைக்கலாம். என்றார்.

No comments:
Post a Comment