Saturday, October 01, 2011
புலிகளின் நெடியவன் குழுவின் ஸ்ராஸ்பூர்க் சந்திப்பிற்கு அரியம் அழைக்கப்படவில்லை!
புலிகளின் நெடியவன் குழுவின் கீழ் இயங்கும் புலிகளின் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தினால் ஸ்ராஸ்பூர்க்கில் நடத்தப்பட்ட சந்திப்பிற்கு தான் அழைக்கப்படவில்லை என்றும் தன்னை அழைத்ததாக ஐரோப்பிய தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் அறிக்கை விட்டது தவறு என்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஸ்ராஸ்பூர்க்கில் நடத்தப்பட்ட சந்திப்பிற்கு இராஜவரோதயம் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவஞானம் சிறீதரன், பா.அரியநேந்திரன், யோகேஸ்வரன் சீனித்தம்பி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக நெடியவன் குழுவைச்சேர்ந்த நடராசா கிருபானந்தன் என்பவர் அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சந்திப்பிற்கு சிறிதரன், யோகேஸ்வரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு உலக தமிழ் பண்பாட்டு இயக்க மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு மட்டுமே அழைப்பு வந்ததாகவும், நெடியவன் குழுவின் சந்திப்பிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் தெரிவித்தார். அவ்வாறு தனக்கும் அழைப்பு விடுத்ததாக கூறுவது பொய் என்றும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
இச்சந்திப்பு வடக்கு கிழக்கு மக்களின் அவலங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக புலிகளின் ஐரோப்பிய தமிழர் ஒன்றியம் பெயரில் இயங்கும் நெடியவன் குழு கூறினாலும் இது முழுமுழுக்க தமிழ் தேசியக் புலிகூட்டமைப்பில் உள்ளவர்களை பிரித்து கஜேந்திரன் குழுவில் இணைக்கும் முயற்சி என நம்பகமாக தெரியவருகிறது.
சிறிதரன், யோகேஸ்வரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் நெடியவன் குழுவை சேர்ந்தவர்களுக்கிடையிலான இரகசிய சந்திப்பு கடந்த 27, 28ஆகிய இரு தினங்கள் ஸ்ராஸ்பூர்க்கில் நடைபெற்றது.
சுவிசில் (புலிகளின்) பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், சிறிதரன் மற்றும் பலர் கலந்து கொள்ளும் செந்தமிழ்மாலை, சுவிற்சர்லாந்தில் (புலிகளின்) பாராளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment