Thursday, September 1, 2011

கொக்கட்டிச்சோலை கட்டாச்சேனையில் ஆயுதங்கள் மீட்பு!

Thursday,September,01,2011
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கட்டாச்சேனை என்ற பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது,புலிகளின் பழைய முகாம் அமைந்திருந்த பகுதியில் இருந்து பெரும் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரீ. 56 ரக துப்பாக்கிகள் உட்பட பெரும் தொகையான ஆயுதங்களை மீட்கப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரி56 ரக துப்பாக்கிகள், 30 தோட்டக்கள், தொடர்பாடல் கருவிகளுக்காக பயன்படுத்தப்படும் அண்டனா போன்றவற்றை தாம் மீட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் உதவி காவற்துறை அத்தியட்சகர் பீ.ஜே. சில்வஸ்டர் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையின் களுவாஞ்சிகுடி கட்டளை அதிகாரி மாரப்பனவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment