Thursday, September 1, 2011

யாழ்.நாகர் கோயில் பகுதியில் கண்ணிவெடி அகற்றப் பயன்படும் வாகனம் கண்ணிவெடியில் சிக்கிப் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்!

Thursday,September,01,2011
யாழ்.நாகர் கோயில் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் ஒன்று நிலக் கண்ணிவெடியில் சிக்கிப் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த ஹலோட் ரஸ்ட் நிறுவனப் பணியாளர்களான சு.தனபாலசிங்கம், எஸ்.குணரட்ணம் ஆகியோர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவமானது நேற்று நடைபெற்றதாக ஹலோட ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்.நாகர் கோயில் பகுதியில் உள்ள மிதிவெடிகளை கனரக வாகனங்கள் மூலம் ஹலோட் ரஸ்ட் நிறுவனம் அகற்றி வருகிறது.

கடந்த 2 மாத காலமாக 2 கனரக வாகனங்களின் உதவியுடன் மிதிவெடி அகற்றப்பட்டு வருவதாக அந்த நிறுவனப் பணியாளர் ஒருவர் கூறினார். அந்தக் கனரக வாகனங்களில் ஒன்றே, வாகனங்களை இலக்கு வைத்துப் புதைக்கப்படும் நிலக்கண்ணி வெடியில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment