Thursday,September,01,2011
பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. இவர் தமிழில் 85 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சண்டைக்கோழி, பட்டியல், வல்லவன், பருத்தி வீரன், சென்னை 28, யாரடி நீ மோகினி, பில்லா, தீனா, பையா, சரோஜா, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள் யுவன் இசை அமைப்பில் வந்தவை.
யுவன்சங்கர் ராஜாவுக்கும், சுஜன்யாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணம் குறுகிய காலத்திலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் யுவன்சங்கர் ராஜாவுக்கும் ஷில்பா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. ஷில்பா டாக்டராக உள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதியில் இன்று காலை யுவன்சங்கர் ராஜாவுக்கும் டாக்டர் ஷில்பாவுக்கும் திடீர் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் யுவனின் தந்தை இளையராஜா மற்றும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கிறது.

No comments:
Post a Comment