Thursday,September,01,2011
வவுனியா மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீளக்குடியமர்தப்பட்டுள்ள மக்களின் பொருளாதார நிலையை உயர்வடையச் செய்யும் நோக்கில், வவுனியா மாவட்டத்தில் பாரிய ஆடைத் தொழிற்சாலைகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
இக்கட்டுமான வேலைகள் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக 25 மில்லியன், 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது. இவ் வேலைத்திட்டத்தின் மூலம் 1000 பேருக்கான நேரடியான வேலைவாய்ப்புக்கள் மற்றும் பல மறைமுகமான வேலைவாய்ப்புக்கள் என்பன ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டு அபிவிருத்திப்பணிகளுக்கென பாரிய நிலப்பரப்புக்கள் இனம்காணப்ப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென முறையே 200 ஏக்கர் நிலப்பரப்பு அபிவிருத்தி சபைக்காகவும், மேலும் 200 ஏக்கர் நிலப்பரப்பு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்காகவும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளன.
இங்கு 75 வீதமான மிதி வெடி அகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அப்பிரதேசங்கள் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

No comments:
Post a Comment