Thursday,September,01,2011
ஒன்றரை வயது மகளை பேரூந்தில் கைவிட்டு, இறங்கி சென்ற பெண்ணொருவரை நேற்று (31) வவுனியா காவற்துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பெண்ணை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட பதில் நீதிபதி முருகேசு சிற்றம்பலம் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவில் இருந்து செட்டிக்குளம் நோக்கி சென்ற பேரூந்தில் நேற்று முன்தினம் பயணம் செய்த இந்த பெண் மதியம் 1.30 அளவில் பேரூந்தில் மகளை கைவிட்டு, இறங்கி சென்றுள்ளார். இது குறித்து பேரூந்தின் சாரதி வவுனியா காவற்துறையில் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த பெண் கைதுசெய்யப்பட்டார்.
பெண்ணினால் கைவிட்ப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காவற்துறையினர் இந்த குழந்தையை பராமறித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment