Thursday, September 1, 2011

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது-ராஜீவ விஜேசிங்க!

Thursday,September,01,2011
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முதல் தடவையாக அரசாங்கம் மறைமுகமாக யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினர் உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில இராணுவ உத்தியோகத்தர்கள் மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இறுதி அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கபடவில்லை.
ஒவ்வொருவரிடமும் சென்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டீர்களா என வினவப்பட மாட்டாது எனவும் அவவ்வாறான விசாரணைகள் எதுவும் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடிச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இது தொடர்பில் பரிந்துரைகளை செய்யும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சில குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் பகிரங்க விசாரணைகள் நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருவதாகக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை ஆகிய இரண்டு வழிகளிலும் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜனாதிபதியை சிங்கள அரச தலைவராக சித்தரிக்கின்ற போதிலும், அவர் சகல இனங்களையும் ஒரே விதமாக பார்க்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியைக் கற்று வருவதாகவும் எந்தவொரு தலைவரும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள நாட்டம் காட்டவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலை ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை தாண்டி, அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு அற்றி சேவைகளை மாநில மற்றும் இந்திய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment