Thursday, September 29, 2011

இலங்கையின் படகொன்றை காணவில்லை!

Thursday,September, 29, 2011
கொழும்பு:இலங்கை கடல் எல்லையில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்த படகொன்று காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த ஓகஸ்ட் மாதம் கிரிந்த பிரதேசத்தில் இருந்து ஐந்து மீனவர்களுடன் இந்தப் படகு கடலுக்குச் சென்றுள்ளது. படகு காணாமல் போனமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக ஏனைய நாடுகளுக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தீடீர் சோதனைப் பிரிவின் பணிப்பாளர் லால் டி சில்வா கூறினார்.

இதேவேளை கடல் எல்லையை மீறியமை காரணமாக இந்திய கரையோரப் பாதுகாப்புச் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 35 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஏழு படகுகளும் விடுவிக்கபட்பட்டுள்ளன.

எனினும் விடுவிக்கப்பட்டுள்ள மீனவர்களை அனுப்பிவைப்பதற்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை எனவும், கடற்றொழில் திணைக்களத்தின் திடீர் சோதனைப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இதன் பிரகாரம் கடல் எல்லையை மீறிய குற்ச்சாட்டின் பேரில் கைதான 51 இலங்கை மீனவர்கள் தொடர்ந்து இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment