Thursday,September, 29, 2011
சவுதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்கலாம் என்று அறிவித்த 2 நாட்களில், கார் ஓட்டியதற்காக பெண் ஒருவருக்கு 10 சவுக்கடி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் வழக்கத்தில் உள்ளன. நீண்ட காலமாக அங்கு கடைபிடிக்கப்படும் கட்டுப்பாட்டில் ஒன்றுதான் பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்ற தடை. இதை மீறி கார் ஓட்டுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடு அமலில் இருக்கும் போது, 2015ம் ஆண்டில் நகராட்சி தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கலாம் என்று அந்நாட்டு மன்னர் அப்துல்லா அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களில் ஷ்யாமா ஜஸ்டனியா என்ற பெண் கார் ஓட்டிய குற்றத்திற்காக தண்டனைக்கு ஆளாக நேரிட்டது. கார் ஓட்டியதை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு 10 சவுக்கடி கொடுக்க ஜெடாஹ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற்ற எனக்கு தண்டனை வழங்கியது அதிர்ச்சியாக உள்ளது. எனவே, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று ஷ்யாமா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment