Thursday, September 29, 2011

மெனிக் பாம் முகாமில் எஞ்சியிருக்கும் மக்கள் கொம்பாவில்லில் மீள்குடியேற்றம்!

Thursday,September, 29, 2011
கொழும்பு:தற்போது மெனிக் பாம் நலன்புரி கிராமத்தில் தங்கியிருக்கும் 2097 குடும்பங்களைச் சேர்ந்த 7394 பேரை மீள் குடியமர்த்தும் நோக்கில் கொம்பாவில் பகுதியில் 600 எக்கர் புதிய கிராமமொன்றும் தயார்படுத்தப்படுகின்றது. இக் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீட்டுடனான 40 பேச் நிலமும் வழங்கப்படவுள்ளது.

இம் மக்கள் புதுக்குடியிருப்பின் 7ஆவது கிராமசேவைப் பிரிவிற்கும், மெரிடிம்பத்து 3ஆவது கிராமசேவையாளர் பிரிவிற்கும் உட்பட்டவர்கள். எனினும் இப்பிரதேசங்களில் வெடிக்காத வெடிப்பொருட்கள் மற்றும் மிதிவெடிகள் உயர் செறிவில் காணப்படுவதனால், இப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியமர்துவது பாதுகாப்பானது அல்ல என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தற்கமைய, இவர்கள் புதிய கிராமத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு அரசாங்க அதிபர், ஐ.நா தூதரகங்கள், பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து பல நிகழ்ச்சிகளை மக்களுக்காக ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment