Thursday, September 29, 2011

இந்தியாவுக்கு 15 மில்லின் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கையர் இருவர் சற்றுமுன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Thursday,September, 29, 2011
கொழும்பு:இந்தியாவுக்கு 15 மில்லின் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கையர் இருவர் சற்றுமுன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், மீகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் 2கிலோ 400 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகளை முதுகில் மறைத்துவைத்து பெங்களூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விமான நிலைய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம் அரசு உடைமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment