Thursday, September 29, 2011

பிரித்தானியாவில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று முற்பகல் நாடு திரும்பினர்!

Thursday,September, 29, 2011
கொழும்பு:பிரித்தானியாவில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று முற்பகல் நாடு திரும்பினர்.

இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் மேற்கொண்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூழானந்த பெரேரா குறிப்பிட்டார்.

இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய கடமைநேர முகாமையாளர் குறிப்பிடுகிறார்.

பிரித்தானியாவில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட 50 இலங்கையர்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூழானந்த பெரேரா குறிப்பிட்டார்.

இதன் பின்னரே இவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

நாடு கடத்தப்பட்ட சுமார் 50 இலங்கையர்கள் இன்று முற்பகல் 10.22 அளவில் கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்தனர்

இவர்களுடன் சுமார் 100 பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகளும் வந்திருந்ததாக எமது வானூர்தி தள செய்தியாளர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே கடந்த வருடமும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் பலர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment