Saturday, August 20, 2011
காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் கச்கபேஸ்வரர் கோவில் அருகே நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.
காஞ்சீபுரம் நகர செயலாளர் சேகர் வரவேற்றார். மாநில மாணவர் அணி துணை செயலாளர் திராவிடச் செல்வி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கோகுலகண்ணன், அப்துல் மாலிக், செல்வம், மாவட்ட மாணவர்அணியை சேர்ந்த எழிலரசன், முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.முக. பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:-
பணகார மாணவர்கள், ஏழை மாணவர்கள் என தரம் பிரிக்காமல் அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வியை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. அ.தி.மு.க. அரசு பதவியேற்ற உடன் சமச்சீர் கல்வியை முழுவதுமாக தடை செய்தது.
தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே ஜெயலலிதா அதை தடை செய்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சமச்சீர் கல்வியை உடனடியாக அதை அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது தி.மு.க. விற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி.
அ.தி.மு.க. அரசு வேண்டு மென்றே தி.மு.க.வினர் மீது பொய் வழக்குபோட்டு பழிவாங்கி வருகிறது. மிசா காலத்திலேயே சிறைச்சாலையை கண்டு அஞ்சாத நாங்கள் இந்த பொய் வழக்கிற்கு அஞ்சமாட்டோம். தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்களே அழிந்து போவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாரதி, வைத்தியலிங்கம், சுந்தர், பொன்மொழி, எட்டியப்பன், சுகுமார் சன்பிராண்ட் ஆறுமுகம், படப்பை மனோகரன், துரைசாமி, வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் நந்தப்பேட்டை சங்கர், குன்னம் முருகன், எல்.டி.ஜார்ஜ், பொடவூர் ரவி, கொளத்தூர் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காஞ்சீபுரம் ஒன்றிய செயலாளர் பி.எம். குமார் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment