Saturday, August 20, 2011
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் நேற்றிரவு (19.8.2011) ஏற்பட்ட மர்ம மனிதன் பதற்றத்தினால் பொலிசாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாலமுனை மற்றும் கர்பலா காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.
காத்தான்குடியை அண்மித்த ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பெலாலிசார் குவிக்கப்பட்டனர்.
பொலிசாருக்கும் பொதுமக்கள் சிலருக்கு மிடையில் முரண்பாடு அதிகரிக்கவே பொலிசாரை நோக்கி பொதுமக்கள் சிலர் கற்களை வீசியுள்ளனர்.இதன் பின்னர் பதற்ற நிலை அதிகரித்த போது அங்கு வரவழைக்கப்பட்ட இரானுவத்தினர் சப்த வேட்டுக்களை தீர்த்து பொதுமக்களை கலைத்துள்ளனர்.
இதன் போது காத்தான்குடி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும்வேன் அதே போன்று புதிய காத்தான்குடி கர்பலாவீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் என்பவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில ஹோட்டல் கடைகளின் முன்பகுதி கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று சில வீடுகளிற்குள் இருந்த மின் குமிழ்கள் வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோர் இரானுவ பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசி நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், இன்று அதிகாலையில் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குட்வின் சந்தியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் எரிந்து கொண்டிருந்த டயர்களை அகற்றி வாகனப்போக்குவரத்தை சீர் செய்தனர்.
தற்போது மேற்படி பிரதேசங்களில் பதற்ற நிலை காணப்படுகின்றன.
காத்தான்குடியில் தொடரும் பதற்ற நிலை!
நேற்றிரவு பாலமுனை / கர்பலா பகுதிகளில் மர்ம மனிதர்கள் ஊடுருவியுள்ளதாகவும், பாதுகாப்புத் தரப்பு வாகனம் ஒன்று சிலரை இறக்கி விட்டுவிட்டு சென்ற பின்னரே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் பரவிய தகவல்களை அடுத்து, அங்கு கூடிய மக்களை கலைந்து போகுமாறு பாதுகாப்புத் தரப்பினர் கேட்டுக்கொண்டதோடு கலைக்க முற்பட்ட வேளையில் இரு தரப்புகளுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.
இந்த நிகழ்வை தொடர்ந்து கர்பலா நகர் தொடக்கம் குட்வின் சந்திவரை இராணுவத்தினர் குவிக்கப்பட்டதோடு, இராணுவம் குவிக்கப்பட்ட பகுதிகளான காத்தான்குடி கடற்கரை வீதி மற்றும் நூரானியா பள்ளிவாயலை அண்டிய பகுதிகளில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கும்,வாகனங்களுக்கும் நள்ளிரவு வேளையில் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் பல மோட்டார் சைக்கிள்களின் உடைந்த பாகங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேபோன்று வீதியால் தராவீஹ் தொழுகை முடித்துவிட்டு வீதியால் சென்ற ஒருசிலர் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகியதுடன், பல மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பு தரப்பினரால் பறிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை பிரதான வீதியிலும் மற்றும் கடற்கரை வீதியிலும் டயர்கள் எரிக்கப்பட்டிருந்ததோடு ஆங்காங்கே மக்கள் குழுமி இருப்பதையும் பிரதான வீதியில் பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. போக்குவரத்திற்கு எந்தவித இடைஞ்சலும் இந்தச் செய்தி பதிவேற்றப்படும்வரை (07.30am) எற்படாத நிலையில் காத்தான்குடி நகர் முழுதும் ஒருவித பதட்ட நிலை உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இந்த பதட்ட நிலையை தணிக்கும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இன்று விசேடமான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

No comments:
Post a Comment