Saturday, August 20, 2011
வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற புலி உறுப்பினர்கள் மீண்டும் இலங்கைக்குள் புகுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு படையினருக்கு இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழத்தின் வருடாந்த கலந்துரையாடல் 2011 இல் அமர்வொன்றுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே கோதபாய ராஜபக்ஷ இந்த தகவலை வலியுறுத்தினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்.
கடந்த 3 தசாப்த கால யுத்தத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம், சர்வதேசம் என பல துறைகளிலும் முழுநாடும் பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்னரும் நாம் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் ஏற்கனவே நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நல்லிணக்கத்திற்கான பல சந்தர்ப்பங்களை இழந்து நிற்கின்றோம். பல புத்திஜீவிகளையும் இழந்து விட்டோம்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல் இறைமையைப் பாதுகாத்தல் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக வரும் அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாத்தல் என்பவையே பாதுகாப்பு படையினரின் முதன்மைப் பணியாகும்.அது ஒருபோதும் மாறாது.
புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையில் மோதலில் ஈடுபட ஆயுதக் குழுக்கள் இல்லை என்கிற போதிலும் நாட்டின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேண வேண்டியது அவசியம். ஏனைய பல நடவடிக்கைகள் இருக்குமெனினும் அது தான் படையினரின் பொறுப்பு.
இலங்கையின் பாதுகாப்பை பொறுத்த வரையில் இனி கடற்படையின் பாத்திரம் முக்கியமானதாகும். ஏனெனில் புலிகள் தங்களுக்கான ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாகவே கடத்தி வந்தனர். உள்நாட்டில் எதுவும் தயாரிக்கப்படவில்லை. ஆகவே ஆயுதக் கடத்தல்கள் மற்றும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றவர்கள் மீண்டும் நாட்டிற்குள் புகுவது போன்றவற்றை தடுக்க வேண்டும்.

அதேபோல், இவ்வாறான சக்திகள் மீண்டும் செயற்பாட்டுக்கு வராமல் இருப்பது முக்கியம். அதற்கு புலனாய்வுத் துறையினது நடவடிக்கைகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மிகவும் முக்கியம்' என்றார்.
No comments:
Post a Comment