Saturday, August 20, 2011

உண்மை கண்டறியும் குழு முதல்வரால் நியமணம்!

Saturday, August 20, 2011
நேற்று (19.8.2011) கிழக்குமாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் மர்ம மனிதனினால் பெண்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், பெண்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் பிரதி நிதிகள் அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கிறிஸ் மனிதன், மர்ம மனிதன் பற்றிய நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இச்சம்பவங்களில் குறிப்பாக பெண்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்ற நிலமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் வைத்தியசாலையிலும், பொலிஸ் நிலையங்களிலும் நடத்தப்படுகின்ற விதங்கள், கடைப்பிடிக்க வேண்டிய அனுகுமுறைகள் பற்றிய அவசியங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு பெண்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகள் கொண்டு வந்தனர்.

இக்கூட்டத்தின் இறுதியில் மர்மமனிதனால் எதிர்நோக்கப்படும் ஆபத்துக்களின் உண் மைநிலையை கண்டறியும் குழுக்களை அமைத்தல், பெண் பொலிசாரினை கூடிய அளவிலும் உடனடியாக பொலிஸ்நிலையங்களில் பணிகளில் ஈடுபடுத்தல், வதந்திகள் வருவதை கட்டுப்படுத்தல் என்றவாறாக பலவித முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது. அணைத்தும் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக முதல்வர் இதன் போது உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment