Saturday, August 20, 2011

அமெரிக்காவின் தலைமையில் இந்தியா உட்பட்ட 20 நாடுகள் இலங்கையில் விமானப் பயிற்சி-எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம!

Saturday, August 20, 2011
அமெரிக்காவின் தலைமையில் இந்தியா உட்பட்ட 20 நாடுகள் இலங்கையில் விமானப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளின் ஊடாக அனர்த்தங்களின் போதும் அவசரத் தேவைகளின் போதும் ஏனைய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் சிமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தெரிவித்தார்.விமானப்படை தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே விமானப்படைத் தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

இவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:

ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பாதுகாப்பு கட்டனை தலைமையகத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நாடுகளின் விமானப் படைகள் இலங்கையில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. இந்த பயிற்சிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டுப் பயிற்சிகளில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கம்போடியா, கனடா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மாலைதீவு, மொங்கோலியா, நேபாளம், நியூசிலாந்து, பெபுவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, கொங்கோ, அமெரிக்கா மற்றும் வியட்னாம் போன்ற நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதேவேளை இந்த கூட்டு விமானப் பயிற்சி குறித்து அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்க மற்றும் இலங்கை விமானப் படைகள் இணைந்து நடாத்தும் (Pacific Airlift Rally) 2011 பசுபிக் எயார்லிவ்ட் ரலி 2011 கூட்டுப் பயிற்சி நடவடிக்கை இரத் மலானை விமான நிலையத்தில் இடம் பெறவுள்ளது.

இந்த நடவடிக்கையானது ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கான அமெரிக்க பசுபிக் விமான படையினரால் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது. 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இந் நடவடிக்கையானது இவ்வருட த்துடன் எட்டாவது தடவையாக இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பல் தரப்பு மனிதாபிமான உதவிகள் அனர்த்த நிவாரண பணிகளுக்கு ஒத்துழைக்கும் முகமாக ஆசிய பசுபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த 21 நாடுகளுக்கிடையிலான வான் மார்க்க நிவாரணப் பணியாற்று திறனை மேம்படுத்துவதே இவ்வாண்டிற்கான கூட்டுறவுப் பயிற்சி நடவடிக்கையின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

ஜப்பானின் யொகோடா விமானத் தளத்தில் நிலை கொண்டுள்ள 374ஆவது அமெரிக்க விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த மூன்று C130 ஹேர்குலிஸ் விமானங்களும் அவுஸ்திரேலியா மலேசியா மற்றும் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த தலா ஒரு C130 விமானமும் இந்த கூட்டுப் பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்கவுள்ளன.

No comments:

Post a Comment