Thursday, August 18, 2011
இலங்கையின் பாதுகாப்பு படைத் தரப்பினர் தொடர்பாக நாட்டு மக்கள் தெளிவான நம்பிக்கை கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ரத்மலானையில் உள்ள ஜென்ரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு தொடர்பான பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினை வெளிநாட்டு சக்திகளின் துணையின்றி, தீர்ப்பதற்கான தகைமையை இலங்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தரப்பினரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை எமது நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் லலித்த வீரதுங்க, இலங்கை மக்களுக்கு கணினி அறிவு கடந்த ஐந்து வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இது தவிர இலங்கையின் கல்வி தரத்தை மேலும் அதிகரிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment