Thursday, August 18, 2011
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படும் நீதிமன்ற கட்டிட நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீதிமன்ற செயற்பாடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனால் அந்த மாவட்ட மக்கள் நீதியைப் பெறுவதில் பல சிக்கல்களை எதிர்நோக்கினர்.
இதன் பொருட்டு வேறு மாவட்டங்களுக்கு அவர்கள் செல்ல வேண்டியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் நீதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் நீதிமன்ற கட்டட நிர்மாணப்பணிகளைத் துரிதப்படுத்தி ஒக்டோபர் மாதம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment