Thursday, August 18, 2011

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் நீண்டகால நடைமுறையில் மாற்றம்!

Thursday, August 18, 2011
நீண்டகால நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டு இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் பெண்கள் வெளிநாடு செல்லும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக ஆண்கள் வெளிநாடி செல்லும் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிக்கின்றார்.

இந்த நிலைமையானது சிறந்ததொரு முன்னேற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆண்களுக்கான பல்வேறு தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது என் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பெண்கள வீட்டுப்பணிப் பெண்களாக செல்வதை குறைத்து அதற்கு பதிலாக ஆண்களை கூடுதலாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருலதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகயத்தின் தலைவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment