Monday, August 29, 2011

சில சக்திகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படுகின்றனர்-சம்பிக்க ரணவக்க!

Monday, August 29, 2011
சில சக்திகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வைகயில் செயற்பட்டு வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலேயே கிறிஸ் பேய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் படைத் தரப்பினருக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் படைத்தரப்பினர் ஈட்டியுள்ள நன்மதிப்பை சீர்குலைக்கும் முயற்சிகளாக இவற்றைக் கருத வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இயங்கி வரும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு சில தரப்பினர் தீவிர முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் எட்டாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள ரீதியாக தாக்கங்களை ஏற்படுத்த சில சக்திகள் முனைப்பு காட்டி வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான அடிப்படையற்ற வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தில் திருத்தங்களை ஏற்படுத்தி சமூகத்தில் முறுகல் நிலையை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment