Monday, August 29, 2011
கடந்த இரண்டு தினங்களில் வவுனியா நகரிலும் சுற்றுப்புறங்களிலும் சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 80 பேர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்
மின்மானியில் திருட்டு வேலை செய்தவர்களே அதிகமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார சபையின் கொழும்பிலிருந்து சென்ற திடிர் பரிசோதனைக்குழுவினர் நடத்திய சோதனையின்போது வவுனியா பண்டாரிகுளம், கூமாங்குளம் தேக்கம்காடு , குட்செட் வீதி ஆகிய பகுதிகளில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மாவட்ட பதில் நீதிவான் எம் சிற்றம்பலம் முன்னிலையில் நேற்று இன்றும் ஆஜர் செய்யப்பட்ட போது சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மின்மானியில் திருட்டு வேலை செய்தவர்களிடம் அபராதம் அறவிட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment