Monday, August 29, 2011

ஐரின் சூறாவளி தாக்கியதால் இருளில் மூழ்கியது அமெரிக்கா!

Monday, August 29, 2011
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை Ôஐரின்Õ சூறாவளி நேற்று தாக்கியது. இதையடுத்து, அனைத்து போக்குவரத்தும் முடங்கியதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. சுமார் 30 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கரீபியன் தீவில் உருவான Ôஐரின்Õ சூறாவளி, பஹாமஸ் வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அது, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியை நேற்று தாக்கியது.

140 கி.மீ. வேகத்தில் காற்று: இதன் காரணமாக, நியூஜெர்சி, மேரிலேண்ட், விர்ஜினியா, வடக்கு கரோலினா, நியூயார்க், தல்வார் உள்ளிட்ட கடற்கரையோர மாநிலங்களில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 9 மாநிலங்களில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரையோர மாநில கவர்னர்களுடன் சூறாவளி நிலவரம் குறித்து தொலைபேசி மூலம் அதிபர் ஒபாமா அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார்.

ரயில், விமானங்கள் ரத்து: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் சாலை, ரயில், விமான போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டதால் சுமார் 10 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணு மின் நிலையங்கள், துறைமுகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

நியூயார்க் தத்தளிப்பு:சூறாவளியில் சிக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும். சூறாவளியால் வர்த்தக தலைநகராக விளங்கும் நியூயார்க் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள துறைமுகம், விமான நிலையங்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன.

30 லட்சம் பேர் வெளியேற்றம்: எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சூறாவளி காரணமாக இதுவரை இல்லாத வகையில் தாழ்வான பகுதிகளில் இருந்த சுமார் 30 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடற்கரையோர நகரங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கி உள்ளது.

சூறாவளி வலுவிழப்பு

1ம் நிலை சூறாவளியாக அறிவிக்கப்பட்ட ஐரின் இப்போது 2ம் நிலை சூறாவளியாக வலுவிழந்து உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது இன்று நியூ இங்கிலாந்து பகுதியை நோக்கி நகரும் என்றும் படிப்படியாக வலுவிழந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவி

சூறாவளியால் பாதிக்கப்படுபட்டர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் அவசரகால நிர்வாக அமைப்பு ஆகியவை செய்து வருகின்றன. 6500 பேர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment