Thursday, August 18, 2011

இந்திய இலங்கை மீனவர்கள் உறவு பிரச்சினை குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி.சுதர்சன நாச்சியப்பன் டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளார்!

Thursday, August 18, 2011
இந்திய, இலங்கை மீனவர்கள் உறவு மற்றும் பிரச்சினை குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று இடம்பெறும் இந்தக் கூட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அழைத்துள்ளார்.இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த விவாதம் ராஜ்யசபாவில் அடுத்த வாரம் வரும் நிலையில் சுதர்சன நாச்சியப்பன் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கலந்துரையாடல்; சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக இந்திய ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் - மனித உரிமைகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக விளங்கும் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்ற போது அதில் சுதர்சன நாச்சியப்பனும் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஐயைச் சேர்ந்த எம்.பி அப்பாத்துரை உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டம் இலங்கையின் ரகசிய ஆதரவுடன் நடைபெறும் கூட்டம் என்ற சந்தேகம் இருப்பதால் டி.ராஜா கலந்து கொள்ள மாட்டார் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தக் கூட்டம் தொடர்பாக தன்னை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரையிடம் சுதர்சன நாச்சியப்பன் பேசும் பொது இலங்கையில் நடந்த தவறுக்கெல்லாம் புலிகளளே காரணம், இலங்கை அரசின் சமரச முயற்சிகளுக்கு புலிகள்தான் தொடர்ந்து ஊறு விளைவித்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டனர். உண்மையில் பிரச்சினைகளுக்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம் எனவும் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தான் கருதவில்லை எனவும்; நாச்சியப்பன் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment