Thursday, August 18, 2011
எஞ்சிய 23 உள்ளுராட்சி சபைகளுக்குமான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
அதனடிப்படையில் வேட்பு மனுக்களை இந்த மாதம் 25 ஆம் திகதி வரையில் தாக்கல் செய்ய முடியும்.
இதனிடையே, மாவட்ட செயலாளர் அலுவலகங்களின் ஊடாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் செயலகத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு கட்சியின் மூவருக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுயாதீன குழுவின் இருவர் மாத்திரம் வேட்பு மனு தாக்கல் செய்யும்; இடத்திற்கு செல்ல முடியும்.
இதனிடையே, 23 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடும் சுயாதீன குழுக்கள், தமது கட்டுப்பணத்தை இந்த மாதம் 24 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரைக்கு முன்னர் செலுத்த வேண்டும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
அவசர கால சட்டத்தி கீழ் ஒத்திவைக்கப்பட்ட 17 மாநகர சபைகள், ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 23 உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கென நேற்று வரையில் 8 சுயேட்சை குழுக்கள் தமது கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் நான்கு மாநகர சபைகள் உட்பட 6 உள்ளுரட்சி மன்றங்களுக்காக 5 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.
நுவரெலிய, ரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்காக தலா ஒவ்வொரு சுயேச்சை குழு வீதம் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டுள்ளன

No comments:
Post a Comment