Thursday, August 18, 2011

ரஷ்யாவில் இருந்து 17 ஹெலிகொப்டர்கள் இலங்கை கொள்வனவு செய்துள்ளது!

Thursday, August 18, 2011
ரஷ்யாவின் எம்.ஐ 171 ரக 17 இராணுவ ஹெலிகொப்டர்களை இலங்கை கொள்வனவு செய்துள்ளதாக ரஷ்ய அரச ஆயுத ஏற்றுமதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரொசோபோன் எக்ஸ்போர்ட் எனும் ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் எனட்டோலி இஸேஸ்கிங் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் உலான் உதே விதான நிறுவனத்தினால் தயாரிக்கப்ட்டுள்ள இந்த ஹெலிகொப்டர்கள் இராணுவத் தேவைகள் மற்றும் பிரமுகர்களுக்கான பொருட்களை ஏற்றிச் செல்லல் என நான்கு ரகங்களைச் சேர்ந்தவை என ரஷ்ய அரச செய்திச் சேவையான இட்ட-டாஸ் குறிப்பிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் ரஷ்ய அரசாங்கம் அந்த நாட்டிடம் இருந்து யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கிய கடன் சலுகையின் அடிப்படையில் இந்தக கொடுக்கல் வாங்கள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய அரச செய்திச் சேவைமேற்கோள் காட்டி ரொய்டர் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த ஹெரிகொப்டர் கொடுக்கல் வாங்கல்களின் மொத்த பெறுமதி குறித்து ரஷ்ய அதிகாரிகள் தகவல் எதனையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment