Friday, August 19, 2011

கைதிகள் - விளக்கமறியலில் உள்ளோர் இனி தனித்தனியாக!

Friday, August 19, 2011
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளையும் விளக்கமறியலில் உள்ளவர்களையும் இன்று முதல் பிரித்து வைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறக் கூடிய முறைகேடுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.த.சில்வா குறிப்பிடுகிறார்.

சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கருத்திற்கொண்டே இரண்டு பிரிவினரையும் பிரிப்பதற்கான ஒழுங்குகள் செய்யபட்டடுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலை ஆணையாளர் இதன் மூலம் நிர்வாக நடவடிக்கைகளும் இலகுவாவதாக தெரிவித்தார்.

இதற்கமைய சிறைக்கைதிகள் மற்றும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அகியோரை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு வருவோருக்கு தனித் தனி நுழைவாயில்களும் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment