Friday, August 19, 2011
புலம்பெயர் சமூகத்தில் ஒரு தொகுதி இலங்கைப் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கு முனைப்பு காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
புலம்பெயர் சமூகத்தினால் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பதிலளிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தனிப்பட்ட ரீதியில் படைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர் என தாருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஒட்டுமொத்த இராணுவமும் பொதுமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகளே எனவும், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியதன் காரணமாக யுத்தத்தை இலகுவில் வெற்றியீட்ட முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளினால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட 300000 பொதுமக்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment