Friday, August 19, 2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 18 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வவுணதீவு, பாகக்கொடிசேனை சமுர்தி வங்கயில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை வழி்மறித்து தாக்குதல் மேற்கொள்ள சிலர் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுத் தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. அந்தக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது பொதுமக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மக்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் வவுணதீவு பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யபட்டதையடுத்து இம்மாதம் 25ஆம்திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பும் நிலை வீதியில் சந்தேகத்திட்கிடமான நபர்களின் நடமாட்டம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாகவும் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு கூலாவடி ரமேஸ்புரம் பகுதியில் சந்தேகத்திட்கிடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பான அச்சத்தால் பதற்றம் நிலவியது, இதன்போது வீதியோரங்களில் டயர்களை எரித்து மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

No comments:
Post a Comment