Monday, August 29, 2011
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வக்கீல்கள் சந்திரசேகரன், எஸ்.ரூபன், ஆர்.ராஜீவ்காந்தி, ஜி.பாலாஜி, எஸ்.ராஜன் ஆகியோர் மனு கொடுத்தனர்.
இந்த மனு ஜனாதிபதி, மத்திய உள்துறை, தமிழக கவர்னர், தமிழக உள்துறை அமைச்சகம், சிறைத்துறை ஐ.ஜி., வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பேரறிவாளன் கூறி இருப்பதாவது:-
1991-ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தடா சட்டத்தின்கீழ் நான் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து 28.1.98-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை 11.5.99-ல் சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளானாகிய எனக்கு உள்பட நான்கு பேருக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
17.10.1999-ல் தமிழக கவர்னருக்கு நான் கருணை மனு அனுப்பினேன். அந்த மனு 27.10.99-ல் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். தமிழக கவர்னரின் உத்தரவை 25.11.99-ல் ரத்து செய்த ஐகோர்ட்டு எனது கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது.
25.4.2000-ல் தமிழக கவர்னர் மீண்டும் எனது கருணை மனுவை நிராகரித்தார். இதனால் 26.4.2000-ல் ஜனாதிபதிக்கு நான் கருணை மனு அனுப்பினேன். 11 ஆண்டுகள் கால தாமதத்துக்கு பின்னர் ஜனாதிபதி எனது கருணை மனுவை நிராகரித்து 25.8.2011-ல் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த செயல் சட்ட விரோதமானது. அரசியல் அமைப்புக்கு எதிரானது. ஜனாதிபதி, தமிழக கவர்னருக்கு 27.8.2011 அன்று நான் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்துள்ளேன். ஜனாதிபதிக்கு அனுப்பி இருந்த கருணை மனு குறித்து 1.4.2006, 6.11.2006, 6.9.2007, 11.6.2008, 27.7.2009 ஆகிய தேதிகளில் நினைவூட்டல் கடிதம் எழுதினேன். எனது கருணை மனு குறித்து முடிவு எடுக்கும் முன்பு கீழ்க்கண்ட காரணங்களை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள தவறி உள்ளார். அவை வருமாறு:-
1. பதினொரு ஆண்டுகள் காலதாமதத்துக்கு பிறகு முடிவு எடுத்தது.
2. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனிமை சிறையில் இருந்து வருவது.
3. சிறை விதிகள்படி இருபது ஆண்டுகளான தண்டனை ஆயுள் சிறையாகும். இந்த தண்டனையை நான் அனுபவித்து முடித்து விட்டேன். எனவே இப்போது தூக்குத் தண்டனை விதிப்பது இரட்டை தண்டனையாகும்.
4. 19 வயதில் நான் கைது செய்யப்பட்டேன்.
5. குடும்ப பின்னணியை, கருத்தில் கொள்ளவில்லை.
6. என் கருணை மனு ஏற்கப்பட்டால் சமூக நலம் பாதிக்கப்படுமா என்பது கவனிக்கப்படவில்லை.
7. இந்த கொலை வழக்கில் எனக்கு நேரடி தொடர்பு கிடையாது.
8. கூட்டுச்சதி செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூட்டு சதி என்ற பிரிவில் தண்டனை பெற்ற விஜயன், சுசிதரன், ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்துள்ளது.
9. இந்த கொலை வழக்கில் புலன் விசாரணை முழுமையாக நடக்கவில்லை. விசாரணையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
10. ஆர்.டி.எக்ஸ் வெடி குண்டு தயாரித்தது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக வெளியில் உள்ளனர்.
11. முந்தைய இரண்டு ஜனாதிபதிகளால் உள்துறை அமைச்சகம் கொடுத்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. இதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
12. எனது கருணை மனு மத்திய அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வில்லை.
13. இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது.
14. இந்த விஷயத்தில் ஜனாதிபதி மத்திய அமைச்சரவை முன் என் கருணை மனுவை வைத்து பிறகு பரிந்துரை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
15. விசாரணை நீதி மன்றத்தால் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 19 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது. இதன் மூலம் வழக்கில் பாரபட்சம் காட்டப்பட்டது உறுதி ஆகிறது.
16.நான் ஜெயிலில் இருந்தபடியே எம்.சி.ஏ. படித்து வருகிறேன். தூக்கு கொட்டடியில் இருந்து ஒரு முறையீடு என்ற புத்தகம் எழுதி உள்ளேன். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் அந்த புத்தகம் வெளியாகி உள்ளது.
17. இந்த வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
18. சி.பி.ஐ. அறிக்கை படியே எனக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தடா சட்டத்தின் கீழ் ரகசியமாக நடத்தப்பட்டது. இது பல்வேறு விதங்களில் தவறாக பயன்படுத்த வழி வகுத்தது.
19. இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரி ரகோத்தமன், அடையாளம் காணப்படாத மூன்றாவது குற்றவாளி ஒருவர் உள்ளார். இன்று வரை வெடிகுண்டு தயாரித்தது யார் என்று தெரிய வில்லை என்று சந்தேகங்கள் எழுப்பி ஒரு வாரப்பத்திரிகையில் கட்டுரை எழுதி உள்ளார்.
20. ஜெயின் கமிஷன் இந்த கொலை வழக்கில் 21 பேருக்கு கூட்டு சதி இருப்பது பற்றி சந்தேகம் எழுப்பியது. ஆனால் இதுவரை இதற்கென அமைக்கப்பட்ட சி.பி.ஐ.யின் பல்நோக்கு விசாரணை அமைப்பு இதுபற்றி விசாரிக்கவில்லை.
21. தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கை மறு ஆய்வு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதுவரை இந்த கொலை வழக்கை மறு ஆய்வு கமிட்டி அமைத்து பரிசீலிக்க வில்லை. மேற்கண்ட இந்த காரணங்களை கருத்தில் கொண்டு எனது தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்.
இதற்கு பல முன் உதாரண வழக்குகள் உள்ளன. 12.8.2011 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடித உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வரும் செப்டம்பர் 9-ந் தேதி எனக்கு தண்டனை நிறை வேற்றப்பட உள்ளது. அந்த தண்டனையை குறைத்திட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பேரறிவாளன் தன் மனுவில் கூறி உள்ளார்.
இதே போன்று முருகன், சாந்தன் ஆகியோரும் தங்கள் தரப்பு வாதங்களுடன் மனு செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை நீதிபதி என்.பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. பேரறிவாளன் சார்பில் காலின் கான்கிலேஸ், சாந்தன் சார்பில் மோகித் சவுத்ரி, முருகன் சார்பில் ராம்ஜெத் மலானி ஆகியோர் ஆஜராகி வாதாட உள்ளனர்.

No comments:
Post a Comment