Monday, August 29, 2011

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் முச்சக்கர வாண்டிச் சாரதிகளுக்கான கலந்துரையாடல்!

Monday, August 29, 2011
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் முற்சக்கர வண்டி சாரதிகள் சங்க அங்கத்தவர்களுக்கும் பொலிசாருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று மாலை (28.08.2011) மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிநுட்பக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்தி கரவிட்டகே, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன், காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா உட்பட சிவில் பாதுகாப்புக்குழுக்களின் பிரதி நிதிகள் முற்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நட்புறவை ஏற்படுத்துதல் சிவில் பாதுகாப்புக்குழுக்களை புனரமைத்தல் போன்ற விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.

No comments:

Post a Comment