Thursday, August 18, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கைதாகி விடுதலை!

Thursday, August 18, 2011
திருக்கோவில் பொலிஸாரால் நேற்றுக் காலை கைது செய்யப்பட்ட இரு பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட 9 பேரும் விசாரணையின் பின் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசாரணை அடுத்து விடுவிக்கப்பட்ட போதும் எதிர்வரும் 25 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி இவர்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று மர்மமனிதர்களை பொதுமக்கள் பிடித்த போது பொலிஸார் அவர்களை மீட்டு கைது செய்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தபோது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் வீதிகளில் ரயர்கள் எரித்து ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டனர் இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களான அமிர்தலிங்கம் சந்திரகுமார் மற்றும் சம்பவத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பரணீதரன் உட்பட 9 பேரை பொலிஸார் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment