Thursday, August 18, 2011

இலங்கையில் எஞ்சியிருக்கும் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உதவி செய்யும்!

Thursday, August 18, 2011
இலங்கையில் எஞ்சியிருக்கும் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உதவி செய்யவுள்ளது என உலக மனிதாபிமான தின கொண்டாட்டங்களை முன்னிட்டு இலங்கைக்கான மனிதநேய இணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

மேலும், நிலைத்து நிற்கக்கூடியதும் நிலைபேறானதுமான சமாதானத்திற்கு அத்தியாவசியமானதென நாம் கருதும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புக்களை நாம் கூடுதலாக எதிர்பாரத்து காத்திருக்கிறோம் என இலங்கைக்கான மனிதநேய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை உலக மனிதாபிமான தினத்தின் தொனிப்பொருள் "மக்களுக்கு மக்கள் உதவுதல்" எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிவாரண அமைப்புகளுக்காக வேலை செய்பவர்கள் மட்டுமன்றி சகலரும் மனிதநேயப் பணியாளர் ஆகலாம். ஒரு சமூகம் நெருக்கடிகளால் பாதிக்கப்படுகையில், நெருக்கடியைத் தொடர்ந்து சமூகத்தில் உள்ளவர்களே சமூகத்திற்கு முதலில் உதவி செய்கிறார்கள் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment