Thursday, August 18, 2011

கண்ணீர் புகைக்கு சிக்கிய காத்தான்குடி ஊடகவியலாளர்கள்!

Thursday, August 18, 2011
இன்று மட்டக்களப்பு ஊறணி, பிள்ளையாரடி பகுதிகளில் இடம் பெற்ற பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான கலவரத்தை கலைப்பதற்கு பொலிசார் செய்த கண்ணீர் புகையில் காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ரீ.எல்.ஜௌபர்கான், மற்றும் எம்.எஸ்.எம்.நூர்தீன் உட்பட அங்கு நின்ற ஊடகவியலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்தப் பகுதியில் இன்று குடும்ப பெண்ணொருவரை இனம் தெரியாத மர்ம மனிதன் ஒருவன் தாக்கிய சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கு மிடையில் கலவரம் இடம்பெற்றது.

வீதிகளை மறித்து டயர்களை போட்டு எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் செய்தனர்.

இந்த கண்ணீர் புகையில் அங்கு களத்தில் நின்று செய்திகளை சேகரித்துக்கொண்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஜௌபர்கான், மற்றும் நூர்தீன் ஆகியோர் உட்பட தமிழ் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிக்கிக்கொண்டனர்.

No comments:

Post a Comment