Friday, August 19, 2011
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா தெரிவித்தார்.
சமீப காலமாக யாழ்.நகரத்தில் விபச்சாரம் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ். நகரில் இயங்கும் லொட்ஜ்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் எமது செய்திப்பிரிவினர் முதல்வரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த முதல்வர்,
இங்குள்ள லொட்ஜ்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமல் இயங்கிவருகின்றன என்பது உண்மையாகும். இவற்றைப் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
இங்கு நகரிலுள்ள வீPடுகளே லொட்ஜ்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லொட்ஜ்கள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானது. அவர்களுக்குப் பணம் தேவை என்பதால் வேற்று இனத்தவர்களுக்கும் அதிகம் லாபம் தேடித்தருபவர்களுக்கும் வாடகைக்கு விடுகின்றனர். பணம்தான் முக்கியம் என்ற நோக்கில் லொட்ஜ் நடத்துநர்களும் சமூகம் தொடர்பில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அக்கறையுடைய நடத்துநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிகிறது எனக் கண்ணீர் வடிக்கும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் சமூகம் மீது அக்கறையுடையவர்களா எனத் தெரியவில்லை. இந்த லொட்ஜ்களைப் பதிவு செய்வதாயின் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். காணி அல்லது வீட்டு உரிமைப் பத்திரம் அவசியமாகும். ஆனால் அவை லொட்ஜ் நடத்துநர்களிடம் இல்லை.
எனினும் இவற்றைப் பதிவு செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment