Friday, August 19, 2011
யாழ் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பாக இரண்டாவது சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி சில்வாவின் பணிப்பின் பேரில் விசேட குழுவொன்று இச்சந்தேக நபரை கைது செய்தது என தெரிவிக்கப்படுகிறது.
ஞானசுந்தரம் குகநாதன் மீதான இத்தாக்குதல் தொடர்பாக முதலாவது சந்தேக நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் நடந்த மோதலொன்றையடுத்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது சந்தேக நபர் பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் ஜூலை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment