Saturday, August 20, 2011
புத்தளத்தில் படையினரின் பவல் கவச வாகனம் மோதுண்டதில் பெண் பலி: மற்றொரு பெண் படுகாயம்!
புத்தளத்தில் பெண்கள் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்று படையினரின் பவல் கவச வாகனத்தினால் மோதப்பட்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் வண்ணாத்திவில்லு வீதியில் நேற்றுமாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவச வாகனத்தின் சாரதி வண்ணாத்திவில்லு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கவச வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான வீதிகளில் இராணுவ வாகனங்கள் மிக வேகமாக பயணிப்பதை தடை செய்யுமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment