Saturday, August 20, 2011

பாலியல் குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது

Saturday, August 20, 2011
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிந்த மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாரதிபதி நாமல் வெவே ரதனசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியுள்ள போதே ரகசிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் வெளிநாடு சென்றிருந்தார்.
இந்தநிலையிலே இவர் ரகசிய காவற்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இவரது கைது தொடர்பாக எமது செய்தி பிரிவு காவற்துறை ஊடக பேச்சாளர் ப்ரிசாந்த ஜயகொடியை தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், கைது செய்யப்பட்ட தேரர் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment