Saturday, August 20, 2011

குழந்தை பெறுவதில் தயக்கம் காட்டும் ஜேர்மனி பெண்கள்: ஆய்வில் தகவல்!

Saturday, August 20, 2011
ஜேர்மனியில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் குழந்தை பெறுவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
குழந்தைகளை உரிய முறையில் பாதுகாக்கும் வசதி இருந்தால் குழந்தை பெறலாம் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது காணப்படும் நிதி ஸ்திரத்தன்மையில் தடுமாற்றம், பணி இடங்களில் குடும்பம், நட்பு நடவடிக்கைகள் இல்லாத நிலை போன்ற காரணங்களால் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவில் மிக குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நாடுகளில் ஒன்றாக ஜேர்மனி உள்ளது. ஜேர்மனியில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 1.36 சதவீதமே குழந்தைகள் இருப்பதாக தெரியவந்தள்ளது

No comments:

Post a Comment