Saturday, August 20, 2011
ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்:பள்ளி மாணவர் கைது!
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை கைப்பற்றிய வனத்துறையினர், பள்ளி மாணவரை கைது செய்தனர்.
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பக ரேஞ்சர் திலகராஜ் தலைமையில், வனத்துறையினர் ராமேஸ்வரம் வேர்கோடு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது முத்துராமலிங்கத் தேவர் நகரில் வசிக்கும் ராமேஸ்வரம் 7வது வார்டு தி.மு.க., செயலாளர் வில்லாயுதம் என்பவரின் வீட்டில், இலங்கைக்கு கடத்துவதற்கு வைக்கப்பட்டிருந்த 230 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை கைப்பற்றினர்.
இதன் சர்வதேச மதிப்பு 15 லட்ச ரூபாய். கடல் அட்டைகளை பார்சல் செய்து கொண்டிருந்த இதே பகுதியை சேர்ந்த குழந்தைவேலு என்பவரின் பிளஸ் 1 பயிலும் 17 வயது மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையறிந்த வில்லாயுதம் தலைமறைவானார்.

No comments:
Post a Comment