Saturday, August 20, 2011

உறுதியான தலைமைத்துவம் ஒன்றைக் கொடுக்கும் வகையில் TNA இருக்கின்றதா? கேள்வி எழுப்பியுள்ளார் (புலி)பிறேமச்சந்திரன்!

Saturday, August 20, 2011
உறுதியான தலைமைத்துவம் ஒன்றைக் கொடுக்கும் வகையில் TNA இருக்கின்றதா? கேள்வி எழுப்பியுள்ளார் (புலி)பிறேமச்சந்திரன்!

தமிழ்; மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சி ஒன்றால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை கொடுக்க முடியும். அவ்வாறான தலைமைத்துவம் ஒன்றைத் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கொடுக்கும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் உறுதியான தலைமைத்துவம் ஒன்றைக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. ஒரு வடிவமைப்பற்ற, யாப்பற்ற ஒரு கூட்டாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இருக்கின்றது என குற்றஞ்சாட்டுகின்றார் (புலிகளின்)நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

வருடாந்த மாநாடு வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தல் இடம்பெற்றது. சுரேஸ் பிறேமச்சந்திரன் அங்கு நிகழ்த்திய தலைமை உரையில் மேலும் தெரிவிக்கையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த, ஒரு இறுக்கமான கட்டுக்கோப்புடன் கூடிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னெடுத்துச் செல்லத் தமிழரசுக் கட்சியின் தலைமை விரும்பவில்லை என்பதை அவர்கள் நேரடியாகவும், ஊடகங்கள் ஊடாகவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கு எவ்வித வலுவும் அற்ற உண்மையற்ற விளக்கங்களையும் கூறிவருகின்றனர். இது தமிழ் மக்களிடையே பலத்த விசனத்தையும், கவலையையும் தோற்றுவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற, உள்ளுராட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை மாத்திரம் இலக்காகக் கொண்ட ஒரு தேர்தல்காலக் கூட்டு அல்ல.(புலிகளின்) எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஓரு தேசிய இயக்கமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதே தமிழ்ச் சமுகத்தின்(புலிகளின்) எதிர்பார்ப்பு. இது காலத்தின் தேவை. இதனை இத்தருணத்தில் உணர்ந்தாவது தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பை இறுக்கமான பலமான அமைப்பாக மாற்றத் தமிழரசுக்கட்சி முன் வரவேண்டும் என இம்மகாநாடு அழுத்தமாக வலியுறுத்துகிறது எனத்தெரிவித்தார்.

No comments:

Post a Comment