Friday, August 19, 2011
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள போதை பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானம் 167 பயணிகளுடன் நேற்றிரவு புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் ஒருவர் போதை பொருள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்துக்கு வந்தனர். அனைத்து பயணிகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது அப்துல் அன்சாரி (36) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது பாஸ்போர்டை ஆய்வு செய்தனர்.
சுற்றுலா விசாவில் மலேசியா செல்லவிருந்தார் அன்சாரி. இதையடுத்து, விமானத்தில் இருந்து அவரை இறக்கினர். மற்ற பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இதன்பிறகு அன்சாரியை விமான நிலையத்தில் உள்ள தனியறைக்கு அழைத்த சென்று விசாரித்தனர். அவரது பைகளை பரிசோதித்தனர். 3 பைகளில் கருப்பு பேப்பர் சுற்றப்பட்டு இருந்தது. அவற்றை பிரித்த போது, Ôஎபட்ரின்Õ வகை போதை பொருள் 2 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய். மற்றொரு பார்சலில் ஒரு கிலோ ஹெராயின் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய். அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் விசாரணை நடத்தினார்.
அப்போது அன்சாரி கூறுகையில், ‘‘சொந்த ஊர் ராமநாதபுரம். வேலை தேடி சென்னைக்கு வந்தேன். சைதாப்பேட்டையில் தங்கி இருந்தேன். அப்போது, முகமது என்பவர் அறிமுகமானார். Ôநான் தரும் பார்சலை மலேசியாவில் கொண்டு போய் கொடுத்தால் அங்கு ஒரு வாரம் நட்சத்திர ஓட்டலில் தங்கலாம். செலவு முழுவதையும் நாங்கள் ஏற்று கொள்வோம். மேலும் 10 ஆயிரம் ரூபாய் தருவோம். விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து கொடுப்போம்Õ என்றார். அதனால்தான் போதை பொருள் கடத்தினேன்ÕÕ என்றார். இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகங்கள்
விமானத்தில் ஏறுவதற்கு முன் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும். அப்போது ஒருவரின் உடைமைகள் அனைத்தும் ஸ்கேனிங் செய்யப்படும். இதன்பிறகு குடியுரிமை, சுங்க சோதனை செய்யப்படும். இதிலும் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்வது வழக்கம். இத்தனை இடங்களையும் தாண்டி போதை பொருள் சென்றது எப்படி? விமானத்தில் ஏறிவிட்டார் என தகவல் சென்றது எப்படி என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடத்தலுக்கு யாராவது உடந்தையாக இருந்தார்களா என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

No comments:
Post a Comment