Friday, August 19, 2011

இலங்கை மாணவர்கள் இந்தியாவில்!

Friday, August 19, 2011
இந்திய இலங்கை மாணவர் பரிமாற்றல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சாந்த பட்ரிக் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் இந்திய தலைநகர் புது டெல்கி சென்றுள்ளனர்.

இவர்கள் தற்போது, புது டெல்கி, ஜனக்புரியில் உள்ள பரிசுத்த பிரான்சிஸ் பாடசாலையின் விருந்தினராக தங்கியுள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதமும் யாழ்ப்பாண பரிசுத்த திருக்குடும்ப கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் இந்தியா சென்று திரும்பியுள்ளனர்.

அதேபோல, புதுடெல்கி மாணவர் குழுவொன்றும் இலங்கை வருகை தந்திருந்தனர்.

1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்திய இலங்கை மாணவர் பரிமாற்றல் திட்டம், மாணவர்களின் விஜயத்திற்கான நிதியினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா சென்றுள்ள சாந்த பட்ரிக் கல்லூரி மாணவர்கள், அங்கு இடம்பெறும் உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றுவதுடன், இலங்கை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலாச்சார நிகழ்வுகளையும் நிகழ்த்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment