Thursday, July 21, 2011

புலிகள் அமைப்பிலிருந்து பிளவடைந்த இரண்டு குழுக்களே கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்!

Thursday, July 21, 2011
புலிகள் அமைப்பிலிருந்து பிளவடைந்த இரண்டு குழுக்களே கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். குறித்த இரண்டு அமைப்புக்களிலும் 15,000 முன்னாள் போராளிகள் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்களை களையுமாறு இரண்டு தடவைகள் அரசாங்கம் பொது மன்னிப்புக் காலம் வழங்கிய போதிலும், குறித்த தரப்பினர் 80 வீதமான ஆயுதங்களையே ஒப்படைத்துள்ளனர். குறித்த இரண்டு குழுக்கள் மற்றும் கடும்போக்குடைய அமைப்பு ஒன்று ஆகியவற்றினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுதங்களை களைவதற்கு மேலும் ஓர் பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதூர் மக்கள் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது 160 மில்லியன் பெறுமதியான பணமும், 15 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் வீட்டுக்கு கிழக்கு மாகாணத்தின் சிரேஸ்ட அரசியல் தலைவர் ஒருவர் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்தேக நபரின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டதனை அவதானித்த குறித்த அரசியல் தலைவர் திரும்பிச் சென்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment